Friday 3rd of May 2024 07:47:46 PM GMT

LANGUAGE - TAMIL
அலன் டேவியா
கொரோனாவுக்கு பிரபல ஒளிப்பதிவாளர் பலி!

கொரோனாவுக்கு பிரபல ஒளிப்பதிவாளர் பலி!


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பிரபல ஹொலிவூட் ஒளிப்பதிவாளர் அலன் டேவியா உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரசின் கோரத்தாண்டவத்திற்கு உலகெங்கும் பலதரப்பினரும் சிக்கி வருகின்றனர். கொரோனா வைரசின் பரவுதலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் உலகளாவிய ரீதியில் எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் பாதிப்பும் உயிர்ப்பலியும் கட்டுக்கடங்காமல் அதிகரித்தே வருகிறது.

இந்நிலையில், பிரபல ஹொலிவூட் ஒளிப்பதிவாளர் அலன் டேவியா கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பிரபல இயக்குநர் ஸ்டீவன் ஸ்பில்பெர்க் இயக்கிய ஈ.டி., த கலர் பெர்பிள், எம்பயர் ஒப் த சன், த எக்ஸ்ட்ரா டெரஸ்ரியல் உள்ளிட்ட பல்வேறு ஹொலிவூட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் அலன்.

இவர் 5 முறை ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: சினிமா, புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE